எப்போதும் துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய சிட்டு குருவியின் ஆயுள் முடிக்கப்பட்டது... இன்று காலை இவள்தான் பாடசாலையில் நற்சிந்தனை சொன்னாள்..
துடிப்பானவள்... நல்லா படிப்பாள்.. எப்போதும் இவள் சுத்தமான ஆடை அணிந்து வருவாள்... அனைத்து ஆசிரியர்களுக்கும் இவளில் ஒரு கண் இருந்தது.... இப்படிச் சொல்லிக் கலங்குகிறார் இவளது பாடசாலை அதிபர்... இவளது வகுப்பாசிரியை சம்பவத்தைக் கேள்விப்பட்டு இடிந்துபோனார்...
இவளை நல்லவளாக உருவாக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர் 10 கிலோமீற்றர் தூரத்தில் - சங்கானையில் உள்ள பட்டர்பிளை முன்பள்ளியில் சேர்த்தனர்... அங்கும் இவள் சுட்டித்தனம்....
நடிப்பிலும் அவள் கெட்டிக்காரி.... பாடசாலையில் நாடகங்களிலும் நடித்தாள்... நடனம் ஆடினாள்...
இவளது எதிர்காலம் சிறப்பானதாக மாறும் என தாங்கள் நம்பியிருந்தனர் என இவளைக் கற்பித்த ரியூசன் ஆசிரியைகள் கூறுகின்றனர்...
வீட்டில் இவள் கடைக்குட்டி... பெற்றோர் எத்தகைய அன்பு, பாசம் வைத்திருந்தனர் என்பதை அவர்கள் படுகின்ற வேதனை.. அவர்களின் கதறல் வெளிக்காட்டுகின்றது...
இப்படிப்பட்ட சிட்டுக் குருவியின் கழுத்தை ஏன் நெரித்தார்கள்.... இந்தக் குழந்தையைக் கொல்வதற்கு என்ன தேவை அவர்களுக்கு இருந்தது...?
வேறு யாரும் இல்லை.... எமது ஊரில் உள்ள காவாலிகள் சிலர் தான் இதைச் செய்திருப்பார்கள்... தினமும் கஞ்சா பயன்படுத்தும் சிலர் இங்கு இருக்கின்றனர்.... அவர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என ஊரில் உள்ள சிலர் கூறுகின்றனர்....
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தடுப்பதற்கு நாட்டில் நல்ல சட்டம் இல்லை... இதனால்தான் அவர்கள் இப்படியான வேலைகளைச் செய்கின்றனர் என சிறுமியின் உறவினர்கள் கூறிக் கவலைப்படுகின்றனர்...
இன்று எங்கள் பிள்ளை.... நாளை எந்தப் பிள்ளையோ.... என அவர்கள் ஏங்குகின்றனர்...
ஊரவர்கள் அடையாளப்படுத்திய நான்கு பேர் பொலிஸாரால் விசாரணை என்ற பேரில் அழைத்துச் செல்லப்பட்டனர்....
வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தனது சொந்தக் காரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார்... விசாரணை மேற்கொண்டு உயர் பொலிஸ் அதிகாரிகளை வரவழைத்தார்.... நீதிவான் வந்தார்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி இரவு 10 மணிக்கு மேலும் அவர் அந்த இடத்திலேயே நின்று விசாரணைகளை மேற்கொண்டார்... தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்... மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது....
பொலிஸார் விசாரணை செய்யலாம்... குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம்... முடிவில் நடக்கப்போவது ஒன்றுமில்லை.... குற்றவாளிகளை உரிய வகையில் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை...
முதலில் இலங்கையின் சட்டத்தை மாற்றுங்கள்.. கொலைக்கு கொலைதான் தண்டனை... குற்றவியல் சட்டத்தை இப்படித் திருத்துங்கள்... அப்போதுதான் சிட்டுக் குருவிகள் இந்த நாட்டில் சுதந்திரமாய்ச் சிறகடிக்க முடியும்.
சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா {வயது-06} கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுகின்றது. மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போனார்.
தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தனர்.
அந்த இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணை.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் விசார ணகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 04 பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.....