அந்த நிகழ்வை குழப்புவதற்கும் ஈழத்தமிழர்களிடையே இன விடுதலை என்ற எண்ணமோ நினைவுகளோ இருக்ககூடாது என்பதில் சிங்கள பேரினவாதிகளுக்கு எவ்வளவு அக்கறை உள்ளதோ அதேயளவு பணிகளை யாழிலுள்ள இந்திய துணைதூதரகமும் செய்துவருவது கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்துள்ளது.
அந்த வகையிலேயே இம்முறை அதன் கோரமுகத்தின் உச்சத்தை தொடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடஇந்தியர்களின் கோலி பண்டிகை நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு அதனை மாவீரர் நாளான நவம்பர் -27 இல் செய்வதற்கும் மிகப்பெரிய சதி இடம்பெற்றுவருவது தொடர்பாக தமிழ்க்கிங்டொத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வுகளையும் போராட்ட வடிவங்களிலும் எல்லாவழிகளிலும் தடைகளை போட்டும் மறைமுக சதிகளிலும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகம் எவ்வாறாக செயற்படுகின்றது அதன் மறைமுகத்தில் செயற்படும் புல(ன)நாய்வு கண்கள் எதனை மறைந்திருந்து அவதானிக்கின்றனர் என்பதையும் அவர்களுடைய அழைப்பிதழே காட்டி நிற்கின்றது.
உண்மையிலேயே கோலி பண்டிகையானது மார்ச் மாதத்திலேயே வட இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருவது வழமை ஆனால் அதற்கும்மாறாக இவர்கள் நவம்பர் மாதத்தை தெரிவு செய்ததும் அல்லாமல் அதனை மாவீரர் நாளிலும் நடாத்த தீர்மானித்திருப்பது தமிழ் மக்களிடையே இரட்டிப்பு ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.
வட இந்தியர்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நிகழ்வானது தமிழ்நாட்டு தமிழர்களாலேயே கொண்டாடப்படாத நிலையில் எதற்காக இந்த வடஇந்திய கலாச்சார திணிப்பு யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படுகின்றது என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.
வட இந்தியர்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நிகழ்வானது தமிழ்நாட்டு தமிழர்களாலேயே கொண்டாடப்படாத நிலையில் எதற்காக இந்த வடஇந்திய கலாச்சார திணிப்பு யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படுகின்றது என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த பண்டிகை என் கொண்டாடப்படுகின்றது? சதி எவ்வாறு என சிறு விரிவாக பார்ப்போம்.
கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, `பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
சதிக்கான ஆதாரம்
இந்த பண்டிகை உண்மையிலேயே யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 4ஆம் திகதி நடாத்தப்படவிருப்பதாகவே ஏற்பாட்டாளர்களால் அறிவித்தல் விடுக்கப்பட்டது அதற்கான விளம்பம் கீழேஉள்ளது.
பின்னர் இந்த நிகழ்வானது நவம்பர் 20 திகதிக்கு மாற்றப்பட்டது பின்னர் அது நவம்பர் 20திகதி மாவீரர் வாரம் ஆரம்பிக்கும் எனவும் அதனை பிற்போடும்படியும் தொடர்ந்தும் தமிழ் ஆர்வலர்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு தெரியப்படுத்தவே காத்திருந்த ஏற்பாட்டுக்குழு ஒருபடி மேலே சென்று மாவீரர் நாளான நவம்பர் 27ஐ தெரிவுசெய்து இன்று அதற்கான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை மாவீரர் நினைவு வாரத்தில் கொண்டாடவேண்டாம் என தமிழ் ஆர்வலர்களால் தெரியப்படுத்தப்பட்டபோது அதற்கு அவர்கள் வழங்கிய பதில் சில வேண்டத்தகாதவர்களின் கருத்து இது உங்களின் தீய எண்ணங்களே இது எனவும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(அந்த பதிவு கீழே)
நிகழ்வுக்கான நுளைவுக்கட்டணத்திலும் மோசடி
இந்த நிகழ்வுக்கான நுளைவுக்கட்டணம் ரூபா500.00 என முன்னர் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது தற்போது அது மாவீரர் நாழுக்கு மாற்றப்பட்டதும் நுளைவுக்கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு கலர் பவுடர்களும், வர்ணமழை,நீர்விளையாட்டு என அவர்களின் அறிவிப்பு வந்திருக்கிறது.(அதற்கான ஆதாரம் கீழே)
தமிழர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை புரிந்துகொள்ளாது செயற்படுவார்களானால் அதற்கான
Post a Comment