BREAKING NEWS

World News

Features Videos

தமிழ் இணையங்கள்

20 November 2016

பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள் வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும்    நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது.பேரன்ஸ் கடல் பகுதியில்  புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன்    தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.

இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம்  அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டு பிடிக்கமுடியவில்லை.

கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.

பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.

முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.

கடற்பகுதியின் அடித்தட்டில் பெரிய எரிமலை வாய்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது.

அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன. எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்றதொரு காரணங்களால்தான் பெர்முடா கடற்பகுதியிலும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இதனை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2ithu pool இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில்  நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.

கொலராடோ மாநிலம் பல்கலைக்கழகத்தில் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் கூறியதாவது:-

பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட  மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது.இங்கு பெரும்பாலான நேரம் மேகங்கள் தங்கள் பங்கீட்டு முறையில்  சீரற்ற நிலையில் உள்ளன.ரேடார் செயற்கை  கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யபட்டது. அப்போது  கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது.

இதனால் சக்திவாய்ந்த  45 அடி அலைகள் உருவாகி மேல் எழும்பி விமானத்தில் இருந்து எறியப்படும் வெடி  வெடிகுண்டுகள் போல் மீண்டும் கடலில் விழுகிறது.
இத்தகைய பெரிய மேகங்கள் மேற்கு முனையில்  20 முதல் 55 மைல் தூரங்களுக்கு காணப்பட்டதாக கூறி உள்ளார்.

வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி கூறியதாவது:-

இந்த அறுங்கோண  வடிவங்கள்  கடல் மட்டத்தில் இந்த சராமாறியாக இந்த விமான குண்டுகளாக செயல்பட வைக்கின்றன.கப்பல்களை  கவிழ்க்கவும் விமானங்களை கீழே தள்ளவும்  இந்த காற்று வெடிப்பு 170 மைல் வேகத்தில் வெளிப்புறமாக பரவுகிறது.


சரி இப்போது பெர்முடா முக்கோணத்தின் சில தெரியாத ரகசியங்களை பற்றி பார்ப்போம்.

இந்த பெர்முடா முக்கோணமானது 500,000 லிருந்து 1,510,000 அடியில் பெரியதாக அமைந்துள்ளது.

இதற்குள் சென்று காணாமல் போன கப்பல்களோ, விமானங்களோ திரும்ப கிடைப்பதில்லை.

இந்த பெர்முடா முக்கோணத்தை பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்து எழுதியவர் கிரிஸ்டோபர் என்னும் எழுத்தாளர் தான்.

ஒரு கப்பல் உலகில் எங்கு போய் கொண்டிருந்தாலும் அதன் சரியான திசையை திசைகாட்டி காட்டும் அல்லவா?

ஆனால் இந்த பெர்முடா முக்கோணத்தில் மட்டும் அது தவறான திசையே காட்டும். இதனால் தான் இங்கு பல விபத்துக்குக்கள் நடந்து கப்பல்கள் காணாமல் போகின்றன.

இந்த முக்கோணத்தில் கடைசி நூற்றாண்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், மற்றும் வருடத்துக்கு 20 கப்பல்களும், 4 விமானங்கள் இங்கு காணாமல் போகின்றது.

புரூஸ் ஜெர்னான் என்னும் விமானி மட்டும் தான் இந்த பெர்முடா முக்கோணத்துக்கு சென்று விட்டு பல ஆபத்துகளை சந்தித்து விட்டு அதிலிருந்து திரும்ப வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Copyright © 2016 UN Tamil
Created SRi. Powered by Eelanila