எரிந்துபோன லண்டன் அடுக்குமாடிக்கட்டிடத்தில் எஞ்சியுள்ள உயர் மாடிகளில் தீயணைப்பு படையினர் சென்று சடலங்களை தேடுவதை தொடர்வது பாதுகாப்பானதா என்பதற்கான கட்டுமான பரிசோதனைகள் நடக்கின்றன.
இதுவரை பதினேழு பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்பது பேர் சிகிச்சை பெறுகிறார்கள். பதினெட்டுப்பேரின் நிலைமை கவலைக்கிடம்.
அங்கு அறுநூறு பேர் வரை வாழ்ந்த நிலையில், இன்னும் பலரை கண்டு பிடிக்க முடியாது உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அவசர பணியாளர்களை மகாராணியார் பாராட்டினார். ஆனால், லண்டனின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் லாமி, இதனை கார்ப்பரேட் ஆட்கொலை என்று கூறி, உரியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
Post a Comment